நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அகாடமிகள் நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அகாடமிகள் மண்டல கலாச்சார மையங்கள், மாநில கலாச்சார மையங்கள் மற்ற பிற அரசு அமைப்புகளுடன் உத்திசார் ஒத்துழைப்புடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கலைகளுக்கான சூழல்சார் அமைப்பு மேம்படுகிறது . நாடு முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மண்டல மையங்கள் மற்றும் துணை மையங்களின் விரிவான ஒத்துழைப்புடன் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிறுவனங்கள் மற்றும் மையங்கள் பழங்குடியின சமூகங்களின் தேவைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, அந்தந்த பிராந்தியங்களின் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவித்து பாதுகாக்கின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.