விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை: 1986-87=100) 2024, அக்டோபர் மாதத்தில் முறையே 11 புள்ளிகள் மற்றும் 10 புள்ளிகள் அதிகரித்து, 1315 மற்றும் 1326 என்ற நிலைகளை எட்டியுள்ளது.
2024, அக்டோபர் மாதத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஆண்டுப் பணவீக்க விகிதங்கள் முறையே 5.96% மற்றும் 6.00% ஆக பதிவாகியுள்ளன. இது 2023, அக்டோபரில் 7.08% மற்றும் 6.92% ஆக இருந்தது. 2024, செப்டம்பர் மாதத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 6.36% மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 6.39% ஆகும்.