Friday, January 02 2026 | 02:57:51 PM
Breaking News

நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீடுகள் தொடர்பான தரவுகளில் உள்ள இடைவெளியைக் களைய மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முயற்சி

Connect us on:

நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான நாட்டின் உறுதியான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தேசிய அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், ஐநா சபையின் முகமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தேசிய அளவிலான குறியீடுகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் – தேசிய குறியீடுகளுக்கான கட்டமைப்பு அடிப்படையில், ஆண்டு தோறும் புள்ளிவிவர தினத்தன்று (அதாவது ஜூன் 29-ம் தேதியன்று) அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மத்திய திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிடுகிறது.

2024-ம் ஆண்டு புள்ளியியல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அண்மைக்கால ஆண்டறிக்கை மற்றும் இரண்டு கையேடுகள் பின்வருமாறு:

#நீடித்த வளர்ச்சி இலக்குகள் – தேசிய குறியீடு கட்டமைப்பு முன்னேற்ற அறிக்கை, 2024

#நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த தரவு குறிப்புகள் – தேசிய குறியீட்டு கட்டமைப்பு, முன்னேற்ற அறிக்கை, 2024

#நீடித்த வளர்ச்சி இலக்குகள் – தேசிய குறியீட்டு கட்டமைப்பு, 2024

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த இத்தகைய அறிக்கைகள் மத்திய புள்ளியியல் மற்றும்திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

நீடித்த வளர்ச்சிக்கான குறியீடுகள் தொடர்பான தரவு இடைவெளிகளை களையும் வகையில், மத்திய திட்ட அமலாக்க அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில்  பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். …