விஜயவாடாவில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் 2024 இசை,பக்தி மற்றும் கலாச்சார கொண்டாட்டங்களுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியன ஆந்திரப்பிரதேச அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருவிழா தெலுங்கு கலாச்சாரம் மற்றும் கர்நாடக இசையின் வளமான பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துவதாக அமைந்தது. இதில் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அரங்கேறின.
சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி இந்த விழாவை தொடங்கி வைத்தார். முதல் நாளில் மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கந்துலா துர்கேஷ் முன்னிலையில் இந்த துவக்க விழா நடைபெற்றது. நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், பாரம்பரிய கலைகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களை மக்களுடன் இணைப்பதற்கான ஒரு தனித்துவமிக்க வழியாக அமைந்த இசை சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும் இது வகை செய்கிறது.