மாபெரும் தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி, 7, லோக் கல்யாண் மார்கில் டிசம்பர் 11 அன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடுகிறார்.
சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை விதைத்தன. இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் சாரத்தை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் மொழியில் எடுத்து சொல்லின. 23 தொகுப்புகளில் அவரது முழுமையான படைப்புகள் சீனி விஸ்வநாதனால் தொகுக்கப்பட்டு, அலையன்ஸ் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சுப்பிரமணிய பாரதி எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள், தத்துவ விளக்கங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
Matribhumi Samachar Tamil

