உணவு பதனப்படுத்துதல் துறையில் மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு அம்சமாகும். பண்ணை முதல் சந்தை வரை மதிப்புச் சங்கிலியில் உணவு பதனப்படுத்துதல் துறைக்கு நவீன உள்கட்டமைப்பை உருவாக்க இது பயன்படுகிறது.
நாட்டில் 25 மாநிலங்களில், பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் மிகப்பெரிய உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதும் உள்ளடங்கும்.
இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

