Tuesday, January 27 2026 | 06:18:03 PM
Breaking News

புதிய மின்சார வாகன கொள்கை

Connect us on:

நாட்டில் மின்சார வாகன தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்க 2024-ல் பின்வரும் புதிய திட்டங்களை மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனங்கள் திட்டம்: இந்தத் திட்டம் ரூ.10,900 கோடி செலவில் 2024 செப்டம்பர் 29  மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், மின்சார டிரக்குகள், மின்சாரப் பேருந்துகள், மின்சார அவசர ஊர்திகள், மின்சார் வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் மற்றும் அதன் பரிசோதனை முகமைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமரின் மின்சார பேருந்து சேவைகளுக்கான கட்டணப் பாதுகாப்பு நடைமுறைகள் திட்டம்:

28.10.2024 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ரூ.3,435.33 கோடி செலவில் 38,000-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளின் உற்பத்தியை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம் 2024 மார்ச் 15 அன்று அறிவிக்கப்பட்டு இதற்கான  விண்ணப்பங்கள் மூலம் குறைந்தபட்சம் ரூ.4150 கோடி முதலீடு செய்யவும் மூன்றாவது  ஆண்டின் இறுதியில் குறைந்தபட்சமாக உள்நாட்டு மதிப்புக் கூட்டுத் தொகையாக 25 சதவீதமும் மற்றும் ஐந்தாவது ஆண்டின் இறுதியில் இது 50 சதவீதமும் ஈட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …