இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி ‘காவல்துறை’ மற்றும் ‘பொது ஒழுங்கு’ ஆகியவை மாநில அரசின் வரம்பின் கீழ் வருகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் சைபர் குற்றம் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, வழக்குத் தொடர்வது போன்றவை முதன்மை பொறுப்பாகும். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகள் வழங்குவதுடன் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவியும் அளிக்கிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவர தரவுகளைத் தொகுத்து “இந்தியாவில் குற்றங்கள்” என்ற தலைப்பில் வெளியிடுகிறது. அண்மியல் வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டுக்கான அறிக்கையில் இணையதள கைது மோசடிகள் தொடர்பான குறிப்பிட்ட தரவுகள் என்.சி.ஆர்.பியால் தனித்தனியாக பராமரிக்கப்படவில்லை.
இணையதள கைது மோசடிகள் உள்ளிட்ட கணினி குற்றங்களைக் கையாள்வதற்கான நடைமுறையை விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.