வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வங்கிகளால் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் உள்ளூர் தேவைகள் மற்றும் இளைஞர்கள் நலன்களின் அடிப்படையில் ஆண்டு செயல் திட்டத்தை உருவாக்குகின்றன. தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றால் 64 அங்கீகரிக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் உள்ளன, மேலும் பயிற்சி பெற விரும்புவோர் தங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ் பிரிவு வாரியாக நிதி விடுவிக்கப்படவில்லை, இருப்பினும் 2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை (30.11.2024 வரை) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் உள்ளிட்ட கிராமப்புற ஏழை இளைஞர்களின் பயிற்சிச் செலவுக்காக மாநிலம் / யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.