அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “அமேசான் 2024” உச்சி மாநாட்டில் பேசுகையில், 2047-ம் ஆண்டில் வளர்ந்த பொருளாதாரமாக மாறுவதை நோக்கிய நாட்டின் பயணத்தின் மைல்கற்களாக புதுமை, தொழில்முனைவோர் மற்றும் பொது-தனியார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் அசாதாரண முன்னேற்றங்களை குறிப்பிட்டார்.
உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு புத்தொழில் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு அமேசான் 350 மில்லியன் டாலர் ஒதுக்கீட்டை விரிவுபடுத்தியதைப் பாராட்டிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவு புத்தொழில் நிறுவனங்களை இந்தியாவின் “வளர்ச்சி ஊக்கிகள்” என்று விவரித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு பலவீனமான ஐந்துப் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த இந்தியா உலகளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் ஒன்றாக மாறியுள்ளதை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் தனியாரை அனுமதித்தது உள்ளிட்ட துணிச்சலான அரசின் கொள்கைகளே இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறினார். “இந்தியா இப்போது கிட்டத்தட்ட 1.75 லட்சம் புத்தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ளது, இது 2014-ல் வெறும் 350 ஆக இருந்தது. மேலும் புத்தொழில் சூழல் அமைப்பில் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Matribhumi Samachar Tamil

