வரலாற்றுச் சிறப்புமிக்க அசாம் இயக்கத்தின் போது உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஸ்வாகித் தினத்தில் அஞ்சலி செலுத்தினார். புதுதில்லியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ராமேஸ்வர் தெலி, திரு பிரதான் பருவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தியாகிகளின் உயரிய தியாகங்களை கௌரவிக்கும் வகையிலும் அசாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இத்தினத்தின் முக்கியத்துவம் குறித்து திரு சர்பானந்த சோனாவால் வலியுறுத்தினார். நீதி, ஒற்றுமையின் லட்சியங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் சமூக-அரசியலில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெற்றுள்ள அசாம் இயக்கம், இதற்கு ஒரு சான்றாக திகழ்கிறது. “ஸ்வாஹித் தினம்” கடைப்பிடிக்கப்படுவதன் ஒரு அங்கமாக, அசாம் மாநிலத்தின் வளர்ச்சி, வளத்திற்கான முயற்சிகள் தொடரும் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த இயக்கத்தின் கொள்கைகள் எதிர்கால முயற்சிகளுக்கு வழிகாட்டுவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.