முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையின், அசோகா மண்டபத்தில் அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 11, 2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tags birth anniversary floral tributes portrait Pranab Mukherjee President
Check Also
வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகள் அவசியம்: குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு தரமான குடிமைப் பணிகளின் அவசியத்தை, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாநில பொதுப்பணி ஆணையகங்கள் தலைவர்களின் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றினார். நாட்டைக் கட்டமைப்பதில் பொதுப்பணி ஆணையங்களின் பங்களிப்பு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். அதிகாரிகளின் தகுதிகள் நிலைநிறுத்தப்படுவது மட்டுமின்றி, அது குறித்து வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நிர்வாக அமைப்புகளின் தரம், நேர்மை, செயல்திறனை வடிவமைப்பதில் பொதுப் பணி ஆணையங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று அவர் கூறினார். நாட்டிற்காக சேவையாற்றுவதற்கு திறமையான, பாரபட்சமற்ற மற்றும் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றும் தனிநபர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ள அரசியல் சாசன நிறுவனங்களாக பொதுப் பணி ஆணையகங்கள் திகழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குடிமைப் பணிகளின் மீதான மாறிவரும் தேவைகளை வலியுறுத்திய அவர், டிஜிட்டல் நிர்வாகம், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள், பொருளாதார மாற்றம் போன்ற தேசிய நலன் சார்ந்து நடவடிக்கைகளுக்கு அரசு அளித்து வரும் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது,தேர்ந்தெடுக்கப்படும் குடிமைப் பணி அலுவலர்களின் தரத்தைப் பொறுத்தது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Matribhumi Samachar Tamil

