Saturday, December 06 2025 | 01:43:32 AM
Breaking News

நாட்டின் மீன்பிடித் தொழில் வளர்ச்சி

Connect us on:

நாட்டில் நீர்த்தேக்கம் – 31.50 லட்சம் ஹெக்டேர்,  வெள்ள சமவெளி ஈரநிலங்கள் – 5.64 லட்சம் ஹெக்டேர், குளங்கள் – 24.10 லட்சம் ஹெக்டேர், உவர்நீர் – 12.40 லட்சம் ஹெக்டேர், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் – 1.95 லட்சம் கி.மீ, கடற்கரை – 8118 கி.மீ  என பல்வேறு மீன்வள மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான வளங்கள்  நிறைய உள்ளன. பீகாரில் குளங்கள் -112296 ஹெக்டேர், ஆக்ஸ்போ ஏரிகள் -9000 ஹெக்டேர், ஈரநிலம் -2.40 லட்சம் ஹெக்டேர், நீர்த்தேக்கம் -64470 மற்றும் ஆறுகள் -3200 கிமீ ஆகியவற்றை உள்ளடக்கிய மீன்வளத் தொழில் வளர்ச்சிக்கு  ஏற்ற பரந்த மற்றும் மாறுபட்ட நீர் ஆதாரங்கள் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, உள்நாட்டு நீர்வழிகள் கப்பல் போக்குவரத்து நோக்கங்களுக்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.

மீன்வளத் துறை வளர்ச்சியின் உள்ளாற்றலை முன்கூட்டியே உணர்ந்து, மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், பீகார் உட்பட நாட்டில் மீன்வளத்தின் முழுமையான வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பின்வருவன அடங்கும்; (i) நீலப்புரட்சிக்கான மத்திய அரசு நிதியுதவித் திட்டம்: ஒருங்கிணைந்த மீன்வள மேம்பாடு மற்றும் மேலாண்மைத் திட்டம் 2015-16 முதல் 2019-20 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு ரூ.3000 கோடி மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். (ii) சலுகை நிதி வழங்குவதற்காக 2018-19 முதல் 2023-24 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு ரூ.7522.48 கோடி மொத்த நிதி அளவில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, (iii) மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்குதல் மற்றும் (iv) 2020-21 முதல் 2024-25 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 20,050 கோடி ரூபாய் முதலீட்டில் பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

பீகாரில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டிற்காக, மத்திய அரசின் பங்களிப்பான 158.82 கோடி உட்பட மொத்தம் ரூ.522.41 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளிலும், நடப்பு நிதியாண்டிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பீகாரைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு அவர்களின் நடைமுறை மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் மொத்தம் 1290 எண்ணிக்கையிலான வேளாண் கடன் அட்டைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் 2024 டிசம்பர் 10 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது: பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார நிலை வலுவாக உள்ளது என பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் …