Thursday, December 19 2024 | 11:59:00 AM
Breaking News

பெருகிவரும் இணையவழிக் குற்றங்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துதல்

Connect us on:

பிரான்சின் லியோனில் நடைபெற்ற 19 வது இன்டர்போல் போதைப்பொருள் தடுப்பு வாரிய தலைவர்கள் மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய இந்திய தூதுக்குழு அனைத்து பிரதிநிதிகளிடமும், பெருகிவரும் இணையவழிக்குற்றங்களை கட்டுப்படுத்துவது, உலகளாவிய பாதுகாப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக தொடர்ந்து உள்ளது என்றும் , இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் பன்முக உத்தி தேவை என்றும், இது தீவிரவாத உள்ளடக்கத்தின் வழங்கல் மற்றும் தேவை இரண்டையும் நிவர்த்தி செய்கிறது என்றும் வலியுறுத்தியது. சிபிஐ, இந்தியாவின் தேசிய மத்திய பணியகமாக, இணையவழிக்குற்றங்களை எதிர்த்து போராடுவதற்காக இன்டர்போலுடன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. 2022 அக்டாபர் 18-21 வரை புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச் சபையின் போது, இன்டர்போல் முதல் மெட்டாவெர்ஸை வெளியிட்டது, இது குறிப்பாக உலகளவில் சட்ட அமலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 2024 ஜனவரி-ல், INTERPOL Metaverse-ல் சட்ட அமலாக்க முன்னோக்கு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது.

இது தொடர்பாக, தீவிரமயமாகிவரும் இணையவழிக்குற்றங்கள் தொடர்புடைய பல ஆபத்து காரணிகளை ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கூட்டாக நிவர்த்தி செய்வதற்கும், அதனை சமாளிப்பதற்கான பயனுள்ள வழிமுறை மற்றும் உத்தியை நிறுவுவதற்கும் தீவிரவாத அமைப்புகள் குறித்த உள்ளீடுகள் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல …