பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம், 1890-ம் ஆண்டு அறக்கட்டளை சட்டத்தின் கீழ் தேசிய கலாச்சார நிதியம் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த நிதியத்தின் அனைத்து செயல் திட்டங்களும் திட்ட அமலாக்க குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேசிய கலாச்சார நிதியத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு அல்லது அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்டங்களை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் . பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.