இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள தர நிலைகளின் அடிப்படையில் எஃகு கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதன்படி மத்திய எஃகு அமைச்சகம் எஃகு தரக் கட்டுப்பாட்டு ஆணையை வெளியிட்டுள்ளது. இந்திய தர் நிர்ணய அமைப்பு அறிவித்துள்ள தரத்திற்கு இணையான எஃகு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு பயனாளர்களின் உபயோகத்திற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்கள், இறக்குமதி செய்யப்படும் எஃகு ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் வகையில் தரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தரமான எஃகு உற்பத்தியை மேற்கொள்ள இது வகை செய்கிறது. இருப்பினும், சில எஃகு தரங்கள், இந்திய தர நிர்ணய அமைப்பின் தரத்திற்கு இணையாக இல்லாத போது மத்திய எஃகு அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழுடன் தரமான எஃகை இறக்குதி செய்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

