எஃகு உற்பத்தியில் கரியமில வாயு பயன்பாட்டைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்துவதற்கான பன்முகத் தன்மை கொண்ட அணுகுமுறையுடன் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி எஃகு அமைச்சகத்தால் ஏற்படுத்தகப்பட்ட 14 பணிக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப “இந்தியாவில் பசுமை எஃகு உற்பத்திக்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. எஃகு உற்பத்தியில் கரியமில வாயு நீக்கத்திற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பசுமை தொழில்நுட்பங்களின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் உள்ள சவால்களை சமாளிக்கத் தேவையான உத்திகள் அதற்கான செயல் திட்டம் ஆகியவற்றையும் இது வகுத்தளிக்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமிஇந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

