கரியமில் வாயு நீக்கம் குறித்து வளர்ந்த பொருளாதார நாடுகள் எஃகு இறக்குமதிக்கு கார்பன் வரி விதிப்பது உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் சவால்களை அடுத்து மத்திய அரசு அது சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. எஃகு உற்பத்தித் துறையின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை எட்டும் நோக்கில், நாட்டில் பசுமை எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமிஇந்தத் தகவலைத் தெரிவித்தார்.