இந்தி அல்லாத மொழி பேசும் இந்தி புதிய எழுத்தாளர்களை இலக்கியத்தின் பல்வேறு வகைகளில் படைப்பாற்றல் பெற்றவர்களாக மாற்றும் நோக்கத்துடன், புதுவைப் பல்கலைக்கழகத்தின் ‘இந்தித் துறை மற்றும் மத்திய இந்தி இயக்குநரகம் (கல்வி அமைச்சகம், புது தில்லி), இணைந்து கூட்டு முயற்சியில் “இந்தி பேசும் புதிய எழுத்தாளர்கள் முகாமுக்கு” ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் துவக்க விழா புதுவைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் தரணிக்கரசு தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமினை புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார். இந்த ஐந்து நாள் முகாமில், ஆர்வமுள்ள வளரும் எழுத்தாளர்களுக்கு பாண்டிச்சேரி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிபுணர்களால் இந்தியில் படைப்பாற்றல் மற்றும் எழுதும் பயிற்சி அளிக்கப்படும். தில்லி, சிக்கிம், மும்பை, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பேர் தவிர, பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்கின்றனர்.
இந்த ஐந்து நாள் முகாமினை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்தி துறையின் பேராசிரியர் பத்மப்ரியா, புது தில்லியைச் சேர்ந்த திரு அச்யுத் சிங், ஆகியோர் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
Matribhumi Samachar Tamil

