Friday, January 02 2026 | 11:20:48 PM
Breaking News

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்திற்கு எதிரான உத்தரவை சிசிஐ நிறுத்தி வைத்துள்ளது

Connect us on:

இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம், மகாராஷ்டிரா மாநில டேபிள் டென்னிஸ் சங்கம், குஜராத் மாநில டேபிள் டென்னிஸ் சங்கம் மற்றும் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான உத்தரவை நிறுத்தி வைக்கும் ஆணையை இந்திய போட்டி ஆணையம் சிசிஐ 12.12.2024 அன்று பிறப்பித்துள்ளது.

கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியாவில் டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கும், டேபிள் டென்னிஸ் போட்டிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கும் தொடர்புடைய சந்தைகளில் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு, அதன் துணை அமைப்புகள் மேலாதிக்க நிலையை கொண்டுள்ளன என்று ஆணையம் தீர்மானித்தது.

விசாரணையின் போது எழுப்பப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க டி.டி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இவற்றின் அடிப்படையில் ஆணையம், சட்டத்தின் பிரிவு 27-ன் கீழ் ஒரு நிறுத்த உத்தரவை வெளியிட்டது. டி.டி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு எந்தவொரு பண அபராதமும் விதிப்பதை தடை செய்தது. இந்த உத்தரவு 2021 ஆம் ஆண்டின் வழக்கு எண் 19-ல் பிறப்பிக்கப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

நாடு தழுவிய வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை: அனைத்து வட்டங்களிலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது

இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்,  நாடு தழுவிய அளவில் வைஃபை  அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை …