ஆயுதப்படைகளின் கொடி தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளில் பணிபுரியும் துணிச்சல் மிக்க, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.12.2025) தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆயுதப்படை வீரர்களின் ஒழுக்கம், மன உறுதி, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது நாட்டைப் பாதுகாக்கிறது என்றும் மக்களை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களது அர்ப்பணிப்பு மனப்பான்மையானது, கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் படைகளின் வீரத்தையும் சேவையையும் போற்றும் வகையில், ஆயுதப் படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அசைக்க முடியாத வீரத்துடன் நமது தேசத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயுதப்படை கொடி தினத்தன்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒழுக்கம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை நமது மக்களைப் பாதுகாத்து, நமது நாட்டை பலப்படுத்துகிறது. அவர்களின் அர்ப்பணிப்பானது, நமது கடமை, ஒழுக்கம், தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆயுதப்படை கொடி தின நிதிக்கு அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்.”