விஜய் திவஸ் என்றழைக்கப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது:
“வெற்றி தினமான இன்று, 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம், தியாகங்களை நாம் போற்றுவோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவை நமது தேசத்தைப் பாதுகாத்து, நமக்குப் பெருமை சேர்த்தது. இன்றைய நாளில் அவர்களின் அசாதாரண வீரம் மற்றும் உறுதியுடன் கூடிய உத்வேகத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது. வீரர்களின் தியாகங்கள் என்றென்றும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். நம் நாட்டின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்திருக்கும்.”
Matribhumi Samachar Tamil

