கடந்த மூன்று நிதியாண்டுகளில், அதாவது 2020-21 முதல் 2022-23-ம் ஆண்டு வரை முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதி செலவினம் அதிகரித்துள்ளதாக பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2020-21-ம் நிதியாண்டில் ரூ.651.43 கோடியும், 2021-22 -ம் நிதியாண்டில் ரூ.1046.43 கோடியும், 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1402.89 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

