இந்திரா காந்தி தேசிய கலை மையம் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. இந்திய கலை, கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் போன்றவை தொடர்பான பணிகளை இந்த மையம் மேற்கொள்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்திரா காந்தி தேசிய கலை மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
2019-20: 46.40 கோடி
2020-21: 40.00 கோடி
2021-22: 53.30 கோடி
2022-23: 55.05 கோடி
2023-24: 109.10 கோடி
விடுவிக்கப்பட்ட இந்த தொகை, கலாச்சார தகவல் ஆய்வகம், ஊடக மையம், வெளியீட்டுப் பிரிவு, கல்விப் பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய கலை மையம் போதுமான எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டுள்ளது. அதன் செயல்திறன் திருப்திகரமாக உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கலைப் படைப்புகளை நிறுவுதல், பாரத் மண்டபத்தில் நடராஜர் சிலை நிறுவுதல் போன்ற பல பணிகளை இந்திரா காந்தி தேசிய மையம் கடந்த சில ஆண்டுகளில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.