ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 73.13 கோடி ரூபாய் செலவில், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம்- மணப்பாடு – கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், ஸ்வதேஷ் தர்ஷன் -2.0 திட்டத்தின் துணைத் திட்டமான ‘சவால் அடிப்படையிலான பகுதிகளின் வளர்ச்சி’ திட்டத்தின் கீழ்,
சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமேஸ்வரம் தீவு உள்ளிட்ட 42 இடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.