Thursday, December 19 2024 | 05:28:27 AM
Breaking News

பருவநிலைகளைத் தாங்கி வளரும் திறன் கொண்ட நெல் ரகங்களை உருவாக்குதல்

Connect us on:

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னோடித் திட்டமான ‘பருவநிலை மாற்ற தாங்குதிறன் வேளாண்மைக்கான தேசிய கண்டுபிடிப்பு’  மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல் பயிரிடப்படும் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய தன்மையை ஒருங்கிணைந்த உருவகப்படுத்துதல் மாதிரியாக்க ஆய்வுகளை மேற்கொண்டு  மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வானது பருவகாலங்களில் பயிரிடப்படும் மானாவாரி நெல் பயிர்களின் விளைச்சல் 2050-ம் ஆண்டில் 20% ஆகவும், 2080-ம் ஆண்டில் 47% ஆகவும் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பாசன நெல் சாகுபடி 2050-ம் ஆண்டில் 3.5% ஆகவும், 2080-ம் ஆண்டில் 5% ஆகவும் குறையக்கூடும்.

கடந்த 10 ஆண்டுகளில், மொத்தம் 668 நெல் வகைகள் (நெல்) உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 199 வகைகள் தீவிர மற்றும் பிற வகை பருவநிலைகளைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களாகும். 103 நெல் வகைகள் வறட்சி, நீர் அழுத்தங்களை தாங்கி வளரக்கூடியவை, 50 நெல் வகைகள் வெள்ளம், ஆழமான நீர் நிலைகள், நீரில் மூழ்கும் தன்மையுடன் கூடியவை, 34 நெல் வகைகள் உப்புத்தன்மை  காரத்தன்மை  போன்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.  6 நெல் இரகங்கள் வெப்ப அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. 6 நெல் இரகங்கள் குளிர் அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. இதில் 579 நெல் இரகங்கள் பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரக்கூடியவை.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. பகீரத் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல …