Tuesday, March 11 2025 | 10:54:04 AM
Breaking News

கூட்டுறவு மற்றும் கிராமிய பொருளாதாரம்

Connect us on:

கூட்டுறவு அமைச்சகம், 2021 ஜூலை 6 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவற்றின் திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிரூட்டவும், வலுப்படுத்தவும் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தீவிர பங்கேற்புடன் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கணினிமயமாக்கல் மூலம்  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்துவதற்காக, மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.2,516 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும் ஒரு பொதுவான  அமைப்பின் கீழ் நபார்டு வங்கியுடன் இணைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 67,930 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40,727 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்  இஆர்பி மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல்நீண்டகாலக் கூட்டுறவுக் கடன் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,851 வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. இதுவரை, 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

எஸ்இசிஎல்-ன் டிப்கா மெகா திட்டத்தில் விரைவான நிலக்கரி ஏற்றுதல் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது

நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்), ஃபர்ஸ்ட் மைல் கனெக்டிவிட்டி (எஃப்எம்சி) …