கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்படுவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.
தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்குதல், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல், ஆர்.சி.எஸ் அலுவலகங்களை கணினிமயமாக்குவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு ‘வணிகம் செய்வதை இது எளிதாக்கி உள்ளது. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வெளிப்படையான காகிதமற்ற ஒழுங்குமுறைக்கான டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்குகிறது.
அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாநில அரசுகள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட கட்டத்திலிருந்து, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இந்த அமைச்சகம் வழங்கும் நிதியைப் பயன்படுத்தும் வேகம் பெரும்பாலான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அதிகரித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.