Thursday, December 19 2024 | 03:13:03 AM
Breaking News

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

Connect us on:

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளது. இச்சங்கங்கள் பல மாநில கூட்டுறவு சங்க சட்டம், 2002-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கத்திற்கும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்பினராவதற்கு தகுதியுடையவையாகும். அதன் விவரம் வருமாறு:

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட், கிரிஷக் பாரதி கூட்டுறவு லிமிடெட், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு லிமிடெட், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையம் லிமிடெட் ( அமுல்) மற்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றால் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் ஊக்குவிக்கப்படுகிறது. தேசிய தொழில் முனைவோரின் ஆரம்ப செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.500 கோடியாகும். இதில் ஐந்து ஊக்குவிப்பாளர்கள் தலா ரூ.100 கோடி பங்களிப்பு செய்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.2,000 கோடியாகும்.

நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் பரந்த சந்தைகளை அணுகுவதன் மூலம் இந்திய கூட்டுறவுத் துறையில் கிடைக்கும் உபரிகளை ஏற்றுமதி செய்வதில் இந்த சங்கம் கவனம் செலுத்தும், இதன் மூலம் உலகெங்கிலும் இந்திய கூட்டுறவு தயாரிப்புகள் / சேவைகளின் தேவையை அதிகரிக்கும். அத்தகைய தயாரிப்புகள் / சேவைகளுக்கு சிறந்த விலையைப் பெறும். கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், சான்றளிப்பு , ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஏற்றுமதியை இது ஊக்குவிக்கும். நிதி ஏற்பாடு செய்தல், தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்குதல், பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பில் உதவுதல், சந்தை நுண்ணறிவு முறையை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், தொடர்புடைய அரசு திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் கூட்டுறவுத் துறை மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து ஏற்றுமதியை அதிகரிக்கும் இதுபோன்ற பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றிலும் சங்கம் உதவும்.

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் இதுவரை ரூ.3934 கோடி மதிப்பிலான 31 வேளாண் பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. குழந்தை உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, மசாலாப் பொருட்கள், தேயிலை போன்றவற்றையும் இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைக்க இந்நிறுவனத்துடன் ஒத்துழைக்க தங்கள் மாநிலத்தில் நோடல் ஏஜென்சிகளை நியமித்துள்ளன. இதன் மூலம் ஏற்றுமதிக்குத் தயாராக உள்ள வேளாண் மற்றும் பிற பொருட்களின் கொள்முதல் மற்றும் சந்தை இருப்பை மேம்படுத்தவும், அதன் மூலம் இந்தியாவிலும் வெளியேயும் தயாரிப்புகள் / பொருட்களின் மதிப்பு உணர்தலை மேம்படுத்தவும் முடியும்.

2023-24 நிதியாண்டில் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம்  ரூ. 26.40 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. தனது  செயல்பாட்டின் முதல் ஆண்டில் அதன் உறுப்பினர்களுக்கு 20% ஈவுத்தொகையை வழங்கியுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

நகரக் கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு

நகரக் கூட்டுறவு வங்கிகள் சந்தித்து வரும் இடர்ப்பாடுகளைக் களைவதற்கு  ஓர் அமைப்பை நிறுவ வேண்டிய அவசியம் உணரப்பட்டது. நகரக் கூட்டுறவு …