நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லாவிட்டால் அவை நடவடிக்கைகள் அர்த்தமற்றதாக இருக்கும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். மக்கள் பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்க உதவிடும் என்றும் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய வனப்பணி பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு. தன்கர், வளர்ச்சி, சுற்றுச்சூழல் விவகாரங்களை அரசியல் ஆக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். “தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்த விவாதங்கள் ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக வனப்பகுதிகளில் ஏற்படும் இழப்பை சரிகட்டும் வகையில் காடு வளர்ப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், “விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்ட காலத்தில் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்கை எட்டும் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.