உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 85 வது கூட்டத்தில் பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் ஐந்து திட்டங்கள் (2 ரயில்வே, நெடுஞ்சாலை மேம்பாட்டின் 3 திட்டங்கள்) மதிப்பீடு செய்யப்பட்டன. பல்முனை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஒருங்கிணைந்த மேம்பாடு, கடைக்கோடி பகுதிக்கும் இணைப்பு , பல்வகை வாகன முனையங்களுக்கிடையில் இணைப்பு ஆகிய குறிக்கோள்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த திட்டங்கள் மூலம் பயண நேரங்களைக் குறைக்கவும், போக்குவரத்து வசதியை அதிகரிப்பதன் மூலமும் பிராந்தியங்களுக்கு கணிசமான சமூக-பொருளாதார நன்மைகளை வழங்குவதன் மூலமும் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் நிறைவடையும் போது, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடையற்ற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் போது, அவற்றின் நன்மைகள் அனைத்து பிராந்தியத்திற்கும் பரவலாக கிடைப்பது உறுதி செய்யப்படுகின்றது. பன்முக போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும் உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளியை களைவதன் மூலமும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்ய முடியும்.