ராய்காட் கோட்டை 1909 முதல் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் அதிகார வரம்பின் கீழ் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னமாக உள்ளது. இந்திய தொல்லியல் துறை மற்றும் ராய்காட் மேம்பாட்டு ஆணையம் இடையே 2017-ம் ஆண்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ராய்காட் கோட்டையின் சுற்றுப்பகுதியில் மேம்பாடு மற்றும் வசதிகளை வழங்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல் துறை 1980-ம் ஆண்டு முதல் ராய்காட் கோட்டையின் பல்வேறு பகுதிகளில் பல அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. ராய்காட் கோட்டைக்குள் மகா தர்வாசா, சிம்மாசனா, நாகர்கானா, ஜகதேஷ்வர் கோயில், பஜார்பேட்டை, ஹதி டேங்க் சுவர்கள், பால்கி தர்வாசா, மீனா தர்வாசா, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சமாதி பகுதி மற்றும் அஷ்டபிரதன்வாடா போன்ற பல்வேறு கட்டமைப்புகளின் பாதுகாப்பு இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை, கழிவறை பிரிவு, குடிநீர், இருக்கைகள், அறிவிப்பு பலகைகள் மற்றும் கலாச்சார அறிவிப்பு பலகைகள் போன்ற பல்வேறு வசதிகளும் இந்திய தொல்லியல் துறையால் செய்யப்பட்டுள்ளன. ராய்காட் கோட்டையைப் பாதுகாப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் இது கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.