மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2016-ஐ மின்னணுவியல் அமைச்சகம் விரிவாக திருத்தியமைத்து, மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2022-ஐ நவம்பர் 2022-ல் அறிவிக்கை செய்துள்ளது. இது2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. மின்னணுக் கழிவுகளால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளிலிருந்து சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் மின்னணுக் கழிவுகள் மேலாண்மை செய்யப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே இவ்விதிகளின் நோக்கமாகும்.
இந்த புதிய விதிகள், மின்னணுக் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிர்வகிப்பதையும், மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான உற்பத்தியாளர் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன்படி உற்பத்தியாளர்கள், மறுசுழற்சி செய்பவர்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
புதிய விதிகள் முறைசாரா துறையை தொழில் செய்வதற்கு முறைசாரா துறையை முறைப்படுத்தி தொழில் செய்வதற்கு வழிவகை செய்வதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதையும் உறுதி செய்யும்.
மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள், 2022-ன் படி, மின்னணு கழிவுகள், நகராட்சி திடக்கழிவுகளுடன் கலப்பது கண்டறியப்பட்டால், அவை முறையாக பிரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி அல்லது புதுப்பித்தலுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்காக நகர்ப்புற, ஊரக அமைப்புகளுக்கு விதிகளின் கீழ் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.