Wednesday, January 07 2026 | 11:04:02 PM
Breaking News

இந்திய ரயில்வேயின் பாதுகாப்பிற்கு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு – இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

Connect us on:

ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளுக்காக கூடுதல் தொலைத்தொடர்பு  அலைக்கற்றைகளை  ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறைக்கு  இந்திய ரயில்வே 26.07.2023 அன்று கடிதம் எழுதியுள்ளது.

  இந்தக் கடிதத்தில், தனது பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் அலைக்கற்றையை  ஒதுக்கீடு செய்யுமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.  இதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தை, மத்திய தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டது.

25.10.2019 தேதியிட்ட இந்திய ரயில்வேயின் முந்தைய பரிந்துரைகளின் அடிப்படையிலும், 28.12.2022 தேதியிட்ட என்.சி.ஆர்.டி.சி மற்றும் 11.04.2022 தேதியிட்ட அலைக்கற்றை ஏலம் தொடர்பான அதன் முந்தைய பரிந்துரைகளின் பின்னணியிலும் இந்திய ரயில்வேக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 07.02.2024 அன்று ‘இந்திய ரயில்வேக்கு அதன் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளுக்காக கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை அறிக்கையை சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகளை பெறுவதற்காக வெளியிட்டது.  இது தொடர்பான வெளிப்படையான ஆலோசனைகள் 03.05.2024 அன்று காணொலி மூலம் நடைபெற்றது.

இந்தப் பரிந்துரைகள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் (www.trai.gov.in)   வெளியிடப்பட்டுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …