முன்னாள் படைவீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் கீழ் போதுமான ஓய்வூதியத்தை அரசு வழங்கி வருகிறது. ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் துறை, மத்திய துணை ராணுவப்படை போன்ற துறைகளில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களுக்கு இ.எஸ்.எம் வேலைவாய்ப்பின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு மறுகுடியமர்வு / திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் முன்னாள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 27,78,951 ஆகும். இவர்களில் ராணுவத்தில் 24,02,715 பேரும், கடற்படையில், 1,50,393 பேரும், விமானப்படையில் 2,25,843 பேரும் பணியாற்றியுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1,20,523 பேர் முன்னாள் படை வீரர்களாக உள்ளனர். இவர்களில் முன்னாள் ராணுவத்தினர் 1,04,533 பேர், கடற்படையில் 4,015 பேரும், விமானப்படையில் 11,975 பேரும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அரசு ஏற்பாடு செய்கிறது. இது வேலையளிப்பவருக்கும் வருங்கால விண்ணப்பதாரருக்கும் இடையே நேரடித் தொடர்பை அளிக்கிறது. இதில் நிகழ்விடத்திலேயே திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் கார்ப்பரேட் துறையில் வேலைவாய்ப்பு ஆகியவை அடங்கும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

