Sunday, September 06 2026 | 10:56:06 AM
Breaking News

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியாக்கம் செய்த அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோருக்குப் பிரதமர் பாராட்டு

Connect us on:

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அரபு மொழிபெயர்ப்புகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதை மொழிபெயர்த்து வெளியிட எடுத்த முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீஃப் அல்-நெசெஃப் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் இந்த முயற்சி உலக அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.”

About Matribhumi Samachar

Check Also

இந்தியா-குவைத் கூட்டுப் பாதுகாப்புக் குழுவின் முதல் கூட்டம்: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்

இந்தியாவிற்கும் குவைத்திற்கும் இடையிலான இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில், இந்தியா-குவைத் கூட்டுப் பாதுகாப்புக் குழுவின் (Joint …