உலக தியான தினமான இன்று, தியானத்தை தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தியானம் என்பது ஒருவருடைய வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமியிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;
“இன்று, உலக தியான தினத்தில், தியானத்தை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தியானம் என்பது ஒருவரின் வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமிக் கிரகத்திற்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். தொழில்நுட்ப யுகத்தில், செயலிகள் மற்றும் வழிகாட்டும் காணொலிகள் தியானத்தை நமது அன்றாட நடவடிக்கைகளில் இணைக்க உதவும் மதிப்புமிக்க கருவிகளாக இருக்கும்’’.
Matribhumi Samachar Tamil

