Friday, December 12 2025 | 12:20:18 PM
Breaking News

வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Connect us on:

புதுதில்லியில் உள்ள வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் இன்று (டிசம்பர் 23, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மருத்துவத் தொழில் என்பது வாழ்வாதாரம் மட்டுமின்றி, மக்களின் துன்பங்களைக் குறைப்பது, நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பது, சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிப்பது ஆகிய புனிதமான கடமைகளையும் கொண்டுள்ள தொழிலாகும் என்று கூறினார். மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களாக, மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மருத்துவ வல்லுநர்களுக்கு பொறுப்பு உள்ளது.

மருத்துவர்களிடம் வரும் நோயாளிகள் பயத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள். எனவே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி, ஊக்கமும் தேவைப்படுகிறது. ஆகையால் மருத்துவர் நோயைக் குணப்படுத்துவராக மட்டுமின்றி, இரக்க குணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவம், பொறியியல் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு, மெசெஞ்சர் ஆர்.என்.ஏ தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், முப்பரிணாம உயிரி அச்சு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், ‘சுகாதாரமான  இந்தியாவை’ உருவாக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்

நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை  ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள்  என்பதில் அவர் …