இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனது சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், அனைத்து தரப்பினருக்கும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட தகவல் பகரப்படுவதற்கு புதிய பகிர்வு அம்சங்கள் உதவிசெய்யும். இந்த இணையதளம், தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு விதிமுறைகள், கொள்கைகள், சட்டங்கள், புள்ளிவிவரங்கள், உள்ளிட்ட பல்வேறு விரிவான தகவல்களை வழங்குகிறது. இந்தத் தரவுகளை பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச பிரதிநிதிகள் எளிதில் அணுகிப் பயன்படுத்தலாம்.
புதிய இணையதளம் பின்வரும் கூடுதல் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது து:
தொலைத்தொடர்பு, ஒலிபரப்புத் துறைக்கு புதிய தகவல் பலகை(டேஷ் போர்டு)அறிமுகம்.
ஆராய்ச்சி பணிகளுக்கான தரவுகளை பதிவிறக்கம் செய்ய வசதி.
கிரிட் சட்டக வடிவில் பார்க்கும் வசதியானது பயனாளர்கள் புதிய மற்றும் உள்-உறவாடல் முறையில் தரவுகளைப் பார்வையிட உதவுகிறது.