Tuesday, December 24 2024 | 11:55:28 PM
Breaking News

தேசிய நுகர்வோர் தின கொண்டாட்டம் புதுதில்லியில் திரு பிரலாத் ஜோஷி தலைமையில் நாளை நடைபெறுகிறது

Connect us on:

ஒவ்வொரு ஆண்டும், தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்று பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த நாள் இந்தியாவில் நுகர்வோர் இயக்கத்தின் மாறிவரும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. இந்த நாளில்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நுகர்வோரின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், மோசடி,  சுரண்டல் ஆகியவற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதிருந்து, வளர்ந்து வரும் சந்தைச் சூழலில் நுகர்வோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சினைகள், போக்குகள் மற்றும் சவால்களை மையமாகக் கொண்ட வெவ்வேறு கருப்பொருள்களுடன் ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு நுகர்வோர் தினம் தில்லியில் “மெய்நிகர் விசாரணைகள் மற்றும் நுகர்வோர் நீதிக்கான டிஜிட்டல் அணுகல்” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. நுகர்வோருக்கு விரைவான, செலவு குறைந்த மற்றும் இடையூறு இல்லாத நீதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன் நோக்கங்களுக்கு ஏற்ப இந்தக் கருப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.அதிகரித்து வரும் ஆன்லைன் உலகில் நுகர்வோர்கள் நீதியை அணுக முடிகிறது என்பதை உறுதி செய்வதில் டிஜிட்டல் ஊடகம் மற்றும் கருவிகளின் முக்கியத்துவத்தை திருத்தப்பட்ட சட்டம் எடுத்துக்காட்டுகிறது. நுகர்வோர்கள் தங்களது புகார்களை மின்னணு முறையில் தாக்கல் செய்தல் மற்றும் மின்னணு வர்த்தகம் தொடர்பான விதிகளுடன், டிஜிட்டல் தளங்கள் மூலம் நீதியை அணுகுவதற்கான விதிகளையும் இந்த சட்டம் உள்ளடக்கியுள்ளது.

தேசிய நுகர்வோர் தினத்தன்று மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சருமான திரு பிரலாத் ஜோஷி தொடக்க உரையாற்றுவதுடன், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முக்கிய முயற்சிகளையும் தொடங்கி வைப்பார். இந்த முயற்சிகளில் பின்வருவன அடங்கும்:

முக்கிய மின்னணு வணிகத் தளங்கள் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியில் கையெழுத்திடுதல்: நுகர்வோர் நலத் துறை விரிவான பங்குதாரர் ஆலோசனைக்குப் பின் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியை இறுதி செய்தது. இது ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நுகர்வோர் உரிமைகளை மதிப்பதற்கும் இ-வணிகத் தளங்களின் தன்னார்வ பொது அர்ப்பணிப்பாகும். உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைந்த இந்த முயற்சி இ-வணிகத்தில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

தேசிய நுகர்வோர் தினம் 2024 அன்று, ரிலையன்ஸ் ரீடைல் குழுமம், டாடா சன்ஸ் குழுமம், சோமேட்டோ, ஓலா,  ஸ்விகி போன்ற 13 இ-வணிகத் தளங்களை பிரதிநிதித்துவம் செய்யும் உயர் நிர்வாகிகள் பாதுகாப்பு உறுதிமொழியில் கையெழுத்திடுவார்கள். பாதுகாப்பு உறுதிமொழியைக் கடைப்பிடிப்பதற்கான அவர்களின் ஆதரவும் உடன்பாடும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யும்.

அனைத்து சேவைகளுக்கும் ‘இ-மேப்’ போர்ட்டல் தொடக்கம்

 சட்டமுறை எடையளவு சேவைகள்: இது மாநில சட்டமுறை எடையளவு இணைய தளங்களை ஒரே தேசிய அமைப்பாக ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளமாகும். இந்த முயற்சி வணிகங்களுக்கான உரிமம், சரிபார்ப்பு மற்றும் பதிவு செயல்முறைகளை நெறிப்படுத்துகிறது. இணக்க சுமைகளை குறைக்கிறது; வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது.

 வணிகம் செய்வதை எளிதாக்குதல், நுகர்வோர் உரிமைகளை ஆதரித்தல், தரவு சார்ந்த நிர்வாகத்தை செயல்படுத்துவதை ‘இ-மேப்’ நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழிற்சாலைகள் எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்துவதுடன், நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதோடு, பல்வேறு மாநிலங்களின் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடையே தடையற்ற கலந்துரையாடலுக்கும் வழிவகுக்கும்

2025 முதல் ஸ்மார்ட் தரநிலைகள்: பாரம்பரியமாக தரநிலைகள்  கணினி செயலாக்க ஆவணங்களாக எழுதப்பட்டு, பின்னர் முதன்மை பயனர்களாக மனிதர்களை கருதிக்கொண்டு கொண்டு பிடிஎஃப் ஆக மாற்றப்படுகின்றன. இந்தத் தரநிலைகள் வாசிப்புக்கு சிறந்தவை என்றாலும், கணினிகள் இவற்றை புரிந்துகொள்வது கடினம். இன்றைய டிஜிட்டல் காலத்தில், கணினி அமைப்புகள் மற்றும் இயந்திரங்கள் மிகவும் சிக்கலானவை. மிகவும் புத்திசாலித்தனமானவை, கற்றல் மற்றும் மாற்றியமைக்கும் திறன் கொண்டவை. எனவே தரநிலைகள் இயந்திரம் படிக்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட வேண்டும். ஸ்மார்ட் தரநிலைகள் மனிதர்கள் மற்றும் இயந்திரங்களால் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

சிறந்த தகவல் தொடர்புக்கான 8 தேசிய விருதுகளை வென்றது செயில் நிறுவனம்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு (செயில்-SAIL) இந்திய மக்கள் தொடர்பியல் சங்கம்  எட்டு தேசிய விருதுகளை வழங்கியுள்ளது. அந்த …