“வாழ்வது எளிதான இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. அதனை முன்னெடுத்து செல்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
~ பிரதமர் நரேந்திர மோடி
சிறந்த நிர்வாகம் என்பது, அனைவரையும் பங்கேற்கச் செய்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொறுப்புணர்வுடன், வெளிப்படையான பயனுள்ள, திறன்வாய்ந்த, சமத்துவத்துடன், சட்டத்தின் ஆட்சியை பின்பற்றுவதாகும் என்று ஐநா சபை குறிப்பிடுகிறது.
மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதே சிறப்பான நிர்வாகத்தின் நோக்கமாகும்.
வளர்ச்சியின் இலக்கு என்பது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். எளிமையான செயல்முறைகள், மேம்பட்ட தொழில்நுட்பம், மற்றும் மக்களுக்கான கொள்கைகள் மூலம், சிறந்த நிர்வாகத்தின் பயன்கள், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் ஒவ்வொரு தனி நபரையும் சென்றடையச் செய்வதே நோக்கமாகும்.
மைஸ்கீம் போன்ற இணையதளங்கள் குடிமக்கள் தங்கள் தகுதிக்கு பொருந்தக்கூடிய அரசின் திட்டங்களை எளிதாகக் கண்டறிந்து விண்ணப்பிக்க டிஜிட்டல் தீர்வுகளை வழங்குகின்றன. இத்தகைய இணைய தளங்கள் மூலம் மக்கள் சரியான பலன்களைத் தெரிந்து கொண்டு அணுகுவது எளிமையாகிவிட்டது. குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான தகவல்களுடன் கூடவே இத்தகைய தரவுகள் அவர்களுக்கு அதிகாரத்தையும் அளிக்கிறது.
பிரதமர் மோடியின் பிரகதி (முன்னுணர்ந்து தானாக மேற்கொள்ளும் ஆளுமை மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துதல்) தளமானது 18 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களை நிகழ்நேர கண்காணிப்பு மூலம் அரசின் ஆளுகையை வலுப்படுத்துகிறது.