Wednesday, December 25 2024 | 11:25:29 PM
Breaking News

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முக்கிய முன்முயற்சிகள் – மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்

Connect us on:

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினக் கொண்டாட்டங்களுக்கு இன்று  தலைமை வகித்து பல்வேறு நுகர்வோர் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு பிரல்ஹாத் ஜோஷி, குறைகள் குறித்த காணொலி விசாரணைகள் நுகர்வோருக்கு நீதிக்கான டிஜிட்டல் அணுகலை வழங்குகின்றன என்று கூறினார்.

நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்வதை டிஜிட்டல் மயமாக்குவதைக் குறிக்கும் வகையில் 2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இ-தாகில் தளம் தொடர்பான முன்முயற்சியை அமைச்சர் பாராட்டினார். மின்னணு வர்த்தகத்தில் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகளைத் தொடங்கியதற்காக அவர் வருமான வரித்துறைக்கு பாராட்டு தெரிவித்தார்.

தரக் கட்டுப்பாட்டு தங்க நகைகளுக்கு ஹால்மார்க் குறியீடு செய்தல் மற்றும் தரமற்ற தயாரிப்புகளை திரும்பப் பெறுதல் போன்ற இந்தியத் தர அலுவலகத்தின்(பிஐஎஸ்) முன்முயற்சி களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுகர்வோர் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு இது தொடர்பான கல்வியை அளிப்பதன் மூலம் சிறந்த நுகர்வோர் அதிகாரமளித்தல் சூழலை அரசு ஏற்படுத்தி வருவதாக திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி விகிதம்

கேள்வி 1. பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளதா? பதில்: சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி …