Wednesday, December 25 2024 | 09:29:47 PM
Breaking News

தேசிய விஞ்ஞான நாடக விழா 2024 டிசம்பர் 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது

Connect us on:

தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் கவுன்சிலின் (என்.சி.எஸ்.எம்) முதன்மை நிகழ்வுகளில் ஒன்று, தேசிய அறிவியல் நாடக விழாவாகும். இந்த ஆண்டு இந்த விழா தில்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் 2024 டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி முன்னதாக இந்தியாவின் அனைத்து 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 40,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று படைப்பு அறிவியல் நாடகங்களை கல்வி வடிவத்தில் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இப்போது தில்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, டிசம்பர் 27-ம் தேதி காலை 9.00 மணிக்கு தொடங்கும். புகழ்பெற்ற கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

டிசம்பர் 28-ம் தேதி காலை 11.00 மணிக்கு நிறைவுவிழா நடைபெறும்.

About Matribhumi Samachar

Check Also

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்

புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபி-யின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். முகமது …