Thursday, September 17 2026 | 08:46:10 AM
Breaking News

மலேரியா ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் -மலேரியா இல்லாத நிலையை நோக்கிய பயணத்தில் இந்தியா முன்னேறி வருகிறது

Connect us on:

மலேரியா இல்லாத எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் கதையாகும். 1947-ல் சுதந்திரத்தின் போது, மலேரியா மிகவும் முக்கியமான பொது சுகாதார சவால்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டுதோறும் 7.5 கோடி பேர் பாதுக்காப்பட்டு 800,000 இறப்புகள் பதிவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டு, இடைவிடாத முயற்சிகள் இந்த எண்ணிக்கையை 97% க்கும் அதிகமாக வெகுவாகக் குறைத்துள்ளன. பாதிப்பு வெறும் 20 லட்சமாகவும், மலேரியா இறப்புகள் 2203-ம் ஆண்டில் வெறும் 83 ஆகவும் குறைந்துள்ளன. இந்த வரலாற்று சாதனை, மலேரியாவை ஒழிப்பதிலும், மக்களுக்கு பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO)வெளியிட்ட சமீபத்திய உலக மலேரியா அறிக்கை 2024, இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டாடுகிறது. 2017 – 2023- க்கு இடையில் மலேரியா பாதிப்பு, மலேரியா தொடர்பான இறப்புகளில் குறிப்பிடத்தக்க குறைவு, இந்தியாவின் சாதனைகளில் அடங்கும். இந்த சாதனைகள், 2030-க்குள் மலேரியா இல்லாத நிலையை அடைவதற்கான இந்தியாவின் பார்வையைப் பிரதிபலிக்கின்றன.

2015 முதல் 2023 வரை, பல மாநிலங்கள் அதிக சுமை வகையிலிருந்து கணிசமாக குறைந்த அல்லது பூஜ்ஜிய-சுமை வகைக்கு மாறியுள்ளன. 2015-ம் ஆண்டில் , 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அதிக சுமை (வகை 3) என வகைப்படுத்தப்பட்டன. இவற்றில், 2023-ம் ஆண்டில் இரண்டு மாநிலங்கள் (மிசோரம், திரிபுரா) மட்டுமே வகை 3-ல் உள்ளன. அதே நேரத்தில் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேகாலயா போன்ற 4 மாநிலங்கள் பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்து வகை 2-க்கு நகர்ந்துள்ளன. மேலும், மற்ற 4 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களான அந்தமான் – நிக்கோபார் தீவுகள், மத்தியப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், தாத்ரா – நகர் ஹவேலி ஆகியவை 2023-ம் ஆண்டில் பாதிப்பை கணிசமாகக் குறைத்து வகை 1 க்கு நகர்ந்துள்ளன. 2015-ம் ஆண்டில் 15 மாநிலங்கள் மட்டுமே வகை 1-ல் இருந்தன. அதேசமயம் 2023-ல், 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உயர் / நடுத்தர சுமை வகைகளில் இருந்து குறைந்த பாதிப்பு வகையான வகை 1-க்கு முன்னேறின.

2015-2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மலேரியா பாதிப்பு, இறப்புகள் சுமார் 80% குறைந்துள்ளன. இந்தியாவின் வெற்றிக்கான அடித்தளம் அதன் விரிவான மற்றும் பன்முக உத்தியில் உள்ளது. 2016-ல் தொடங்கப்பட்ட மலேரியா ஒழிப்புக்கான தேசிய கட்டமைப்பு,2027 க்குள் பூஜ்ஜிய உள்நாட்டு மலேரியா பாதிப்பு நிலையை அடைவதற்கான தெளிவான பாதையை வழங்கியுள்ளது.

இந்தியாவின் மலேரியா ஒழிப்பு பயணத்தில் சமூக ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தில் மலேரியா தடுப்பு, சிகிச்சை சேவைகளை சேர்த்ததன் மூலம், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கில் இந்தியா உறுதியாக உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உள்நாட்டு பாதிப்பு நிலையை அடைவதற்கும், மலேரியா மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …