ஊழியர்ர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃஒ (EPFO) அக்டோபர் 2024-க்கான தற்காலிக ஊதிய தரவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி 13.41 லட்சம் உறுப்பினர்களின் நிகர சேர்க்கையை அது வெளிப்படுத்தியுள்ளது. இது அதிகரித்த வேலை வாய்ப்புகள், ஊழியர் நலன்கள் குறித்த அதிகரித்த விழிப்புணர்வைக் காட்டுகிறது.
இபிஎஃப்ஒ அக்டோபர் 2024-ல் சுமார் 7.50 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. புதிய உறுப்பினர்களில் இந்த சேர்க்கை வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள், பணியாளர் நலன்கள் குறித்த அதிகரித்த விழிப்புணர்வு இபிஎஃப்ஒ-வின் வெற்றிகரமான மக்கள் தொடர்புத் திட்டங்கள் ஆகியவை காரணமாகும்.
தரவின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் ஆகும். இது 2024 அக்டோபரில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் 58.49 % ஆகும். அக்டோபர் 2024-க்கான 18-25 வயதுக்குட்பட்டவர்களுக்கான நிகர இபிஎஃப்ஒ சேர்க்கை எண்ணிக்கை 5.43 லட்சம்.
ஏறக்குறைய 12.90 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறி பின்னர் மீண்டும் இபிஎஃப்ஒ-வில் இணைந்துள்ளதாகத் தரவு எடுத்துக்காட்டுகிறது. இந்த எண்ணிக்கை அக்டோபர் 2023 உடன் ஒப்பிடும்போது 16.23% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைக் காட்டுகிறது.
பாலின வாரியான பகுப்பாய்வு, மாதத்தில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களில் சுமார் 2.09 லட்சம் பேர் புதிய பெண் உறுப்பினர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த எண்ணிக்கை 2023 அக்டோபர் 2.12% ஆண்டு வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
மாநில வாரியான பகுப்பாய்வில் மகாராஷ்டிரா மாதத்தில் 22.18% நிகர உறுப்பினர்களைச் சேர்த்து முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் தனித்தனியாக மொத்த நிகர உறுப்பினர்களில் 5% க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டு முன்னிலையில் உள்ளன.