ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வுப் பயணம் மேற்கொண்ட மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், இந்தியாவின் முன்மாதிரி மாவட்டமாக கட்டமைக்கப்பட்டு வரும் பலமு மாவட்டத்தில் இன்று மத்திய அரசுத் திட்டங்களை ஆய்வு செய்தார். இன்று (25.12.2024) அங்கு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்குத் திரு எல். முருகன் மரியாதை செலுத்தினார்.
பின்னர், பலமு மாவட்டத்தில் உள்ள டால்ட்டோன்கஞ்-சில் உள்ள ஆகாஷ்வாணி வானொலி நிலையத்திற்குச் சென்று ஆய்வுப் பணிகளை அவர் மேற்கொண்டார். அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
அதைத் தொடர்ந்து முகமதுகஞ்ச் ரயில் நிலையப் பணிகளை பார்வையிட்டதுடன், புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாதை சுரங்கப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். அது குறித்த தகவல்களை மத்திய இணையமைச்சர் திரு எல். முருகன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக நேற்று (24.12.2024) அவர், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீர் ஆதாரங்கள், உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, நிதி உள்ளடக்கம் தொடர்பான பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தமது மூன்று நாள் ஜார்க்கண்ட் பயணத்தின் போது மத்திய இணையமைச்சர் திரு எல். முருகன், அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மத்திய அரசுத் திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்த ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
.