Thursday, January 22 2026 | 10:03:45 AM
Breaking News

நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் விநியோகிக்க உள்ளார்

Connect us on:

10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 200 மாவட்டங்களில் 46,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் கிராமப்புற நில அளவை, வரைபட தயாரிப்பு (ஸ்வாமித்வா) திட்டத்தின் கீழ், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 27 அன்று நண்பகல் 12:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் வழங்குகிறார்.

சமீபத்திய ட்ரோன் தொழில்நுட்ப கணக்கெடுப்பு மூலம் கிராமங்களில் வசிக்கும் பகுதிகளில் வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் பிரதமரால் ஸ்வாமித்வா திட்டம் தொடங்கப்பட்டது.

சொத்துக்களை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெறுவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது; சொத்து தொடர்பான தகராறுகளுக்குத் தீர்வு காணுதல், கிராமப்புறங்களில் சொத்துக்கள் மற்றும் சொத்து வரியை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கு வசதி செய்தல் மற்றும் விரிவான கிராம அளவிலான திட்டமிடலை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு இது உதவும்.

3.1 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கிராமங்களில் 92% ஆகும். இதுவரை, சுமார் 1.5 லட்சம் கிராமங்களுக்கு சுமார் 2.2 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

திரிபுரா, கோவா, உத்தரகண்ட் மற்றும் ஹரியானாவில் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பல யூனியன் பிரதேசங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு …