வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்தார். அவர்களின் தியாகம் வீரம், ஒருவரின் மதிப்புகள் மீதான உறுதிப்பாட்டிற்கு பிரகாசமான எடுத்துக்காட்டாகும் என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். மாதா குஜ்ரி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஆகியோரின் துணிச்சலையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“இன்று, வீர பாலகர் தினத்தையொட்டி, சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரம், தியாகத்தை நாம் நினைவில் கொள்கிறோம். இளம் வயதில், அவர்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் கொள்கைகளில் உறுதிபட நின்றனர். தங்கள் துணிச்சலால் தலைமுறையினருக்க உந்துதல் அளித்து வருகின்றனர். அவர்களின் தியாகம் வீரத்தின் சான்றாகத் திகழ்வதோடு ஒருவர் தான் கைக்கொண்ட விழுமியங்களுக்கு அர்ப்பணிப்பாக இருப்பதற்கும் சான்றாக இருக்கிறது. மாதா குஜ்ரி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஆகியோரின் துணிச்சலையும் நாம் நினைவில் கொள்கிறோம். மேலும் நியாயமான, இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.