மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய குடிமைப்பணிகள் தேர்வு (யுபிஎஸ்சி சிஎஸ்இ) 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை விளம்பரப்படுத்தியதற்காக வாஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடிஐக்யூ ஐஏஎஸ் ஆகியவற்றுக்கு தலா ரூ. 7 லட்சமும், எட்ஜ் ஐஏஎஸ் க்கு ரூ .1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆணையர் திருமதி நிதி கரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ), நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிமீறல்களுக்கு உத்தரவுகளையும் அபராதங்களையும் விதித்தது.
வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட் தனது விளம்பரத்தில் பின்வரும் கூற்றை முன்வைத்து இருந்தது-
“யுபிஎஸ்சி சிஎஸ்இ 2022-ல் தேர்ச்சி பெற்ற 933 பேரில் 617 பேர்கள்”
“அகில இந்திய தரவரிசையில் முதன்மை 10-ல் 7 “
“அகில இந்திய தரவரிசையில் முதன்மை 20-ல் 16”
“அகில இந்திய தரவரிசையில் முதன்மை 50-ல் 39 “
“அகில இந்திய தரவரிசையில் முதன்மை 100-ல் 72 “
“இந்தியாவின் சிறந்த யுபிஎஸ்சி பயிற்சி நிறுவனங்களின் பட்டியலில் நாங்கள் 1-வது இடத்தில் இருக்கிறோம்”
வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் படங்களை காட்சிப்படுத்தியதையும் ஒரே நேரத்தில் பல்வேறு வகையான கட்டண படிப்புகளையும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரப்படுத்தியதையும் சிசிபிஏ கண்டறிந்தது. இருப்பினும், யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022-ல் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுத்த பாடங்கள் தொடர்பான தகவல்கள் மேலே குறிப்பிட்ட விளம்பரத்தில் வெளியிடப்படவில்லை.
நேர்காணலுக்கான வழிகாட்டுதல் திட்டத்தில் தான் தேர்ச்சி பெற்ற 617 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்திருந்ததை சிசிபிஏ கண்டறிந்தது. சி.எஸ்.இ.யின் இறுதித் தேர்வில் இடம்பெற பயிற்சி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் எடுத்திருந்த குறிப்பிட்ட பாடத்தைப் பற்றி அறிந்துகொள்வது நுகர்வோரின் உரிமையாகும் . தேர்வு எழுத வாய்ப்பு இருக்கும் நுகர்வோருக்கு, சி.எஸ்.இ.யில் தங்களின் வெற்றிக்காக தேர்வு செய்யப்பட வேண்டிய பாடத்தை தேர்ந்தெடுக்க தகவலறிந்து தேர்வை மேற்கொள்வதில் இந்தத் தகவல் பங்களித்திருக்கும்.
வெற்றிகரமான ஒவ்வொரு விண்ணப்பதாரரும்ரும் தேர்ந்தெடுத்திருந்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தை வேண்டுமென்றே மறைப்பதன் மூலம், வஜிராவ் & ரெட்டி நிறுவனம் வழங்கும் அனைத்து படிப்புகளும் நுகர்வோருக்கு ஒரே வெற்றி விகிதத்தைக் கொண்டிருப்பது போல் தோற்றமளிக்கச் செய்தது. இது சரியல்ல. இந்த உண்மைகள் சாத்தியமான மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகளைத் தீர்மானிக்க முக்கியமானதாகும். விளம்பரத்தில் இது மறைக்கப்படக்கூடாது.
ஸ்டடிஐக்யூ ஐஏஎஸ் , எட்ஜ் ஐஏஎஸ் ஆகியவையும் இதுபோன்ற தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக அபராதம் விதிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்தது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் பிரிவு 2 (28) (iv), “முக்கியமான தகவல்களை வேண்டுமென்றே மறைப்பவை” உட்பட தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வரையறுக்கிறது. பல பயிற்சி நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் வெற்றிபெற்ற மாணவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் அவர்கள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட படிப்புகள் பற்றிய முக்கியமான தகவல்களை வேண்டுமென்றே மறைத்து, வெற்றி பெற்ற மாணவர்கள் பயிற்சி நிறுவனத்தில் வழக்கமான வகுப்பறை மாணவர்கள் அல்லது விளம்பரத்தில் வழங்கப்படும் பல படிப்புகளின் மாணவர்கள் என்ற ஏமாற்றத்தை உருவாக்குகின்றன.
தவறான விளம்பரங்களுக்காக சி.சி.பி.ஏ இதுவரை பல்வேறு பயிற்சி நிறுவனங்களுக்கு 45 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. 22 பயிற்சி நிறுவனங்களுக்கு 71 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை நிறுத்துமாறும் சிசிபிஏ உத்தரவிட்டுள்ளது.