Saturday, December 28 2024 | 08:24:18 PM
Breaking News

ரெனால்ட் நிசான் டெக்னாலஜி- பிசினஸ் சென்டர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து திறமை மேம்பாடு- கண்டுபிடிப்புகளில் சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது

Connect us on:

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), திறமை மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரெனால்ட் நிசான் டெக்னாலஜி- பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.

இந்தக் கூட்டாண்மையின் மூலம் பிஎஸ் பட்டப்படிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள 35,000 மாணவ-மாணவிகளுக்கு உள்ளகப் பயிற்சி, பணிநியமன வாய்ப்புகளை சென்னை ஐஐடி வழங்கும். திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு இது வலுமான கட்டமைப்பை ஏற்படுத்தும்.

இந்தக்கூட்டு முயற்சியின் அடிப்படையில் ரெனால்ட் நிசான் டெக் நிபுணர்கள் தலைமையிலான குழுவினர் வழிகாட்டுதல் திட்டங்கள், கலந்தாலோசனை அமர்வுகள், தலைமைப் பண்புக்கான உரையாடல்கள் மூலம் கல்வி அனுபவத்தை மேம்படுத்த உள்ளனர்.

2024 நவம்பர் 15 அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது.

இந்த கூட்டாண்மையை வரவேற்றுப் பேசிய சென்னை ஐஐடி டீன் (கல்வி பாடப்பிரிவுகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், “ரெனால்ட் நிசான் டெக்குடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்  கல்விக்கும் கார்ப்பரேட் உலகங்களுக்கும் இடையே இணைப்பைக் கட்டமைக்கும் சென்னை ஐஐடி தொலைநோக்குப் பார்வைக்கு ‘சிறந்த எடுத்துக்காட்டு என்றார். ரெனால்ட் நிசான் டெக் நிறுவனமும் சென்னை ஐஐடியும்  இணைந்து, பல்வேறு படிப்புகளை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் ஒத்துழைப்புக்கான அளவுகோலை நிர்ணயிக்கின்றன. பெருநிறுவனங்கள் துறையுடன் இதுபோன்ற மேலும் பல ஈடுபாடுகளை எதிர்பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டு முயற்சி குறித்துப் பேசிய ரெனால்ட் நிசான் டெக் நிர்வாக இயக்குநர் திரு டெபாசிஸ் நியோகி கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான கூட்டு முயற்சியில் புதுமைகளை வளர்ப்பதற்கும் எதிர்காலத்தில் வரவிருக்கும் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்த ஒத்துழைப்பு இன்றியமையாதது எனக் கருதுகிறோம் என்றார்.

சென்னை ஐஐடி உடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், தொழில் வல்லுநர்களை மேம்படுத்தும். அத்துடன் வாகன மற்றும் தொழில்நுட்பத்துறையில் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ளும் அமைப்பை உருவாக்கும். தொழில்துறை தலைவர்களையும் நாளைய தீர்வுகளையும் ஒரே நேரத்தில் நாங்கள் உருவாக்குகிறோம்” என்றும் அவர்  குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடி-யின் கோட் (மக்கள் தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையம்) தலைவரும் பிஎஸ் பட்டப்படிப்பு மற்றும் என்பிடெல் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் பேசுகையில், “இந்த ஒத்துழைப்பு கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள கூட்டுறவை பிரதிபலிக்கிறது, இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பலத்தையும் பலன்களையும் பெறுகின்றனர். பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சிகள், வழிகாட்டுதல் திட்டங்கள், பயிற்சி வாய்ப்புகள் வாயிலாக ரெனால்ட் நிசான் டெக் அளித்துவரும் ஆதரவு சென்னை ஐஐடி மாணவர்களின் கற்றல் பயணத்தை மேம்படுத்துகிறது  என்றார்.

ரெனால்ட் நிசான் டெக்- சென்னை ஐஐடி இடையேயான ஆழ்ந்த தொடர்பை வலுப்படுத்தும் அம்சங்கள் வருமாறு:

  • ரெனால்ட் நிசான் டெக் நிறுவனத்தின் மூத்த தொழில் வல்லுநர்கள் மூலம் சென்னை ஐஐடி பிஎஸ் மாணவர்களுடன் இணைந்து செயல்படுதல், 140+ மணிநேரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடல்; எந்திரக் கற்றல் நடைமுறைத் திட்டம்  மற்றும் ‘விளக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு’ பற்றிய தலைமைப் பண்புக்கான கலந்துரையாடல்
  • ரெனால்ட் நிசான் டெக் நிறுவனத்தில் முழுநேர பணியிடங்களுக்கு மாற்றப்பட்ட மூன்று மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி வாய்ப்பு.
  • ரெனால்ட் நிசான் டெக் நடத்தும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வாழ்க்கை குழு விவாதத்தில் சென்னை ஐஐடி ஆசிரியர்கள் பங்கேற்பு.
  • 300-க்கும் அதிகமான ரெனால்ட் நிசான் டெக் தொழில் வல்லுநர்கள், மின்சார வாகனங்கள், 3டி அச்சிடுதல், விநியோகத் தொடர், எந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, மனிதவளப் பகுப்பாய்வு உள்ளிட்ட பாடத் திட்டங்களை சென்னை ஐஐடி மாணவர்கள் எடுத்துள்ளனர்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள  300 மாணவ-மாணவியருக்கு தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

About Matribhumi Samachar

Check Also

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகள் தேர்வு 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை விளம்பரப்படுத்தியதற்காக வஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடி ஐக்யூ ஐஏஎஸ் ஆகியவற்றுக்கு தலா ரூ. 7 லட்சமும், எட்ஜ் ஐஏஎஸ்-க்கு ரூ .1 லட்சமும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய குடிமைப்பணிகள் தேர்வு (யுபிஎஸ்சி சிஎஸ்இ) 2022 மற்றும் 2023 முடிவுகள் பற்றி தவறான கூற்றுகளை  விளம்பரப்படுத்தியதற்காக வாஜிராவ் & ரெட்டி இன்ஸ்டிடியூட், ஸ்டடிஐக்யூ ஐஏஎஸ் …